kalvisirau radio

Sunday, 13 October 2024

இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா???

இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா???

என்ன படிக்குறது? எப்படி படிக்கிறது? எப்படிலாம் கேள்வி கேட்பாங்க??    

இதுக்கெல்லாம் இப்போ தீர்வு ஒரு "QR code".

ஒரே ஒரு நிமிசம் 

நிதானமா இந்த QR code யை ஸ்கேன் பண்ணுங்க அல்லது இந்த லிங்க் ( https://linktr.ee/solliadi ) கிளிக் பண்ணுங்க. உங்க அத்தனை கேள்விக்கும்  பதில் அதுக்குள்ள இருக்கு …

சொல்லி அடி NMMS!!!

Sunday, 16 October 2022

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டி ஆணையர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் கடிதம்


மாணவர்  மற்றும் பெற்றோர் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு  அடுத்த நாள் ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டி ஆணையர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் கடிதம்


Monday, 4 October 2021

மாணவர்கள் நடத்திய வீறுகவியரசர் முடியரசனார் விழா



அக்டோபர் 7 வீறுகவியரசர் முடியரசன் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் தமிழ்நாடு மாணவர் செயற்களம் மற்றும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் ஆகிய அமைப்புகள் இணைந்து  செயற்கள மாணவரின் உலக சாதனை நிகழ்வு, மாநில அளவிலான வீறுகவியரசர் தொடர்கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு, வீறுகவியரசர் தமிழ்ப்பணி பரப்பும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 'வெல்க தமிழ்' ஆசிரியர், 'வெல்க தமிழ்' மாணாக்கர் விருதுகள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து  நடத்தின.
















      விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர்.கவிதைப்பித்தன் தொடக்கவுரையாற்றி 'வீறுகவி காவியம்'நூலுக்கு மதிப்புரை வழங்கினார். விழா மேடையில் முடியரசனாருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டிய கோரிக்கையை வலியுறுத்தி தே பிரித்தோ பள்ளியில் பயின்ற வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற மாணவர் பெர்னால்டு ஜார்ஜ் ராஜ் Monument  Veerukaviyarasar Mudiyarasan என்னும் வார்த்தைகளை அடுக்கி எழுதி மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை வரைந்து உலக சாதனை படைத்ததற்காக உலகசாதனைச்சான்றிதழ் வழங்கியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் விழாப்பேருரையாற்றினார். 

     முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில இலக்கிய அணித் தலைவருமாகிய தென்னவன் அவர்கள் விழாத்தலைமைவகித்து

 "திராவிட நாட்டின் வானம்பாடி- முடியரசன்" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி உலக சாதனை நிகழ்வைத் தொடங்கி வைத்து பாராட்டிப்பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி  தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன்  வாழ்த்துரையாற்றினார். விழாவில் கவிஞர் தமிழ்தாசன் இயற்றிய 'வீறுகவி காவியம்' நூலை முன்னாள் அமைச்சர் தென்னவன் வெளியிட திண்டுக்கல் ஐ.லியோனி பெற்றுக்கொண்டார். விருதுபெற்றோர் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல் துறை இணைப் பேராசிரியர் நெல்லையப்பன் ஏற்புரையாற்றினர். முடியரசனாரின் மூத்த மகள் புலவர் குமுதம், 

தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தாளாளர் அருட்திரு.ம.வின்சென்ட் அமல்ராஜ், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத் தலைவர் பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை, துணைத்தலைவர் பேராசிரியர் இரெ.சந்திரமோகன், தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலச் செயலாளர் புலவர் சு.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீறுகவியரசர் முடியரசனாருக்கு மணிமண்டபமும் சிலையும் எழுப்பவேண்டும், பல்கலைக்கழகத்தில் முடியரசனார் பெயரில் ஆய்விருக்கை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வீறுகவியரசர் முடியரசன் அவைக்களச் செயலாளரும் மாணவர் செயற்கள அறிவுரைஞருமாகிய முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார். அவைக்கள இணைச் செயலாளர் முனைவர் இரா.வனிதா நன்றி கூறினார். மாணவர் செயற்கள தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.இராகவேந்திரன், முதுகலை சமூகவியல் மாணவி காவியா நிகழ்ச்சியைத்தொகுத்துவழங்கினர். மாணவர் செயற்களம் மற்றும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள நிருவாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Sunday, 8 August 2021

Y

Opposites

Opposites

விளையாட்டு முறையில் தமிழ் உயிர் எழுத்துக்கள்

இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா???

இனி NMMS போட்டித்தேர்வுல பாஸ் பண்ண ஒரே ஒரு QR code போதும். நம்ப முடியலையா??? என்ன படிக்குறது? எப்படி படிக்கிறது? எப்படிலாம் கேள்வி கேட்பாங்க...